Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா: மீண்டு வரும் சீனா, அதளபாதாளத்திற்கு செல்லும் இத்தாலி

கொரோனா: மீண்டு வரும் சீனா, அதளபாதாளத்திற்கு செல்லும் இத்தாலி
, சனி, 21 மார்ச் 2020 (08:14 IST)
மீண்டு வரும் சீனா, அதளபாதாளத்திற்கு செல்லும் இத்தாலி
கொரோனா முதன் முதலில் ஆரம்பித்த சீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவவில்லை என்பதும் கடந்த சில நாட்களாக ஒருவர் கூட சீனாவில் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதற்கு நேர்மாறாக இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானோர் 627 பேர் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இத்தாலியில் கடந்த 4 நாட்களாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 பேர் உயிர் இழந்து வருவதாகவும் ஆனால் நேற்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு 627 என்ற எண்ணிக்கையை தொட்டதால் இத்தாலி மட்டுமின்றி உலக நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன
 
ஏற்கனவே இதில் 47 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று மட்டும் 6 ஆயிரம் பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதனால் மருத்துவமனை முழுவதும் நிரம்பி உள்ளது
 
மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் பிணங்களை புதைப்பதற்காக 24 மணி நேரமும் சுடுகாடுகள் இயங்கி வருகிறது என்றும் அப்படியிருந்தும் சுடுகாட்டில் பணிபுரிபவர்கள் ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் பணிபுர்ந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சீனாவின் அதிரடி நடவடிக்கையால் சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. இதே போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்து இத்தாலி அரசு, அந்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன 
 
சீனாவை அடுத்து ஸ்பெயினிலும் கொரோனா தாக்கம் மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நேற்று மட்டும் 262 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒரு பக்கம் நீடித்தாலுக், அது பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் பத்து நிமிட பேச்சால் உயர்ந்தது பங்குச்சந்தை