Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: 25 ஆண்டுகள் சிறை என தீர்ப்பு

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (09:15 IST)
உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் போர் நடந்த போது அந்நாட்டில் இருந்து ஏராளமான அகதிகள் பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த அகதிகள் சிலர் படகில் துருக்கி நாட்டிற்கு அகதிகளாக சென்றனர். அதில் 3 வயது அய்லான் குர்தி என்ற சிறுவன் தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்தான். அந்த படகு கடலுக்குள் மூழ்கியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் அய்லான் குர்தி உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கி குறித்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி உலகையே உலுக்கியது. உலகையே உலுக்கிய இந்த மூன்று வயது சிறுவனின் பிணம் சிரியாவின் போரையே முடிவுக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகோட்டிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது துருக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் படி இந்த படகை ஓட்டிச் சென்ற மூவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் துருக்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments