ஃப்ளாப் கொடுத்து மீண்ட சூப்பர் ஸ்டார்! அமிதாப் பச்சன் 80வது பிறந்தநாள்!

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குறித்த அரிய தகவல்கள்!

Instagram

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பிண்ணனி பாடகர், டிவி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் அமிதாப் பச்சன்.

இவரது தந்தை ஹவினாஷ் ராய் பச்சன் ஒரு இந்தி கவிஞர். தாயார் தேஜி பச்சன் சமூக செயற்பாட்டாளராக இருந்தவர்.

இந்தி சினிமா சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் 1969ல் வெளியான ‘சாத் இந்துஸ்தானி’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

1970கள் வரை இவருடைய படங்கல் பெரும் வெற்றி பெறாத நிலையில் பின்னர் வெளியான ஸன்ஜீர், டீவார், ஷோலே உள்ளிட்ட படங்கள் இவரை ஸ்டார் நடிகராக்கியது

1988ல் இவர் நடித்து வெளியான ‘ஷாஹென்ஸா’ பட வெற்றிக்கு பின் ரசிகர்கள் இவரை ஷாஹென்ஸா என்றே அழைக்கத் தொடங்கினர்.

Instagram

ராஜீவ் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய நட்பில் இருந்த அமிதாப் லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர்.

Instagram

ஃபிலிம்பேர் விருதுகளில் இதுவரை 42 முறை பரிந்துரைக்கப்பட்ட அமிதாப் பச்சன் 16 முறை விருதுகளை வென்றுள்ளார்.

Instagram

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை 4 முறை வென்ற அமிதாப், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் வாழ்நாள் சாஹனைக்கான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார்.

Instagram

மொத்தமா காட்டிட்டா போச்சு..! இளசுகளை ஏங்கவிட்ட இலியானா!

Follow Us on :-