பொங்கல் வைக்கும்போது இதெல்லாம் மறந்துடாதீங்க!

தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கள் பண்டிகையை கொண்டாட நல்ல நேரம் மற்றும் சில அறிவுறுத்தல்கள்.

Various Source

பொங்கல் என்பது தமிழக மக்களின் பழமை வாய்ந்த பண்டிகை. மழை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் பிறகு வரும் அறுவடைக் காலம் இந்தத் தினத்தில் தொடங்குகிறது.

புதுப் பானையில் மாவு கரைசல் கோலமிட்டு, மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும்.

பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய், முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்து அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம்.

குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது ’பொங்கலோ பொங்கல்’ என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது.

முழுக் கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி துண்டு, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய், ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும்.

Various Source

கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தப் பிறகு அனைவரும் பொங்கல் சாப்பிடலாம்.

பொங்கல் வைக்க சரியான நேரம் - காலை 07.45 முதல் 08.45 வரை. மாலை 03.30 முதல் 04.30 க்கு இடைப்பட்ட நேரத்திலும் பொங்கல் வைக்கலாம்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்

ராகுகாலம், எமகண்டம் நேரங்களில் பொங்கல் வைப்பதையும், படைப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி விரதத்தில் இதை மறந்தும் செஞ்சிடாதீங்க?

Follow Us on :-