கோழி கறி என்பது பலருக்கும் விருப்பமான உணவாக உள்ளது. பல்வேறு வகைகளில் தினம் தினம் பிராய்லர் சிக்கனை சாப்பிட்டு வருகிறோம். அவை உடலுக்கு நல்லதா என்பது குறித்து பார்ப்போம்.
Various Source
கோழிக் கறிகளில் பிராய்லர் கோழிக்கும், நாட்டுக் கோழிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பிராய்லர் கோழிகளையே பல வகைகள் உட்கொள்கிறோம்.
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஹார்மோன் மாற்றமடைவதாகவும், பெண்கள் பருவமடைவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
பிராய்லர் கோழிகள் ஊட்டச்சத்து மிகுந்த தீவனம் அளித்து வளர்க்கப்படுகின்றன. இவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க குறைந்த விலை பிராய்லர் சிக்கன் உதவுகிறது.
பொதுவாக பிராய்லரோ, நாட்டுக் கோழியோ, சிக்கனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் பல உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம்.