சர்க்கரை வியாதி இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?
பல்வேறு விட்டமின்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்ட பழங்களில் ஒன்று வாழைப்பழம். பல சத்துக்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில வகை வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various Source
வாழைப்பழத்தில் விட்டமின் சி, பி6, நார்ச்சத்து, பொட்டாசியம், குளுக்கோஸ் ஆகியவை நிறைந்துள்ளது.
வாழைப்பழம் ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடியது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் குறைவாக உள்ள பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
Various Source
நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சை வாழை, செவ்வாழை, நேந்திரம் பழங்களை சாப்பிடலாம்.
Various Source
சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் பூவம்பழம், ரஸ்தாளி உள்ளிட்ட குளுக்கோஸ் அதிகமுள்ள பழங்களை தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பை குறைப்பதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.