ஸ்மார்ட்போன் சூடானால் என்ன செய்ய வேண்டும்?

பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில் பல சமயம் ஸ்மார்ட்போன்கள் அதிக சூடாவதும் அதனால் சில பாதிப்புகள் ஏற்படுவதும் நடக்கிறது. ஸ்மார்ட்போன்களை சூடாகாமல் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என பார்ப்போம்.

Pixabay

ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் சூரிய ஒளி படும் இடங்களில் வைக்காமல் இருப்பது நல்லது.

ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் சூடாகும். அதனால் பயன்பாட்டிற்கு இடையே ஃபோனுக்கு சிறிது ஓய்வு கொடுக்கலாம்.

அதிகமான அப்ளிகேசன்களை ஒரே நேரத்தில் பயன்பாட்டில் வைத்திருப்பதை தவிர்த்து தேவையான அப்ளிகேசன்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட்போன் அதிக சூடானால் அதை கவரில் இருந்து எடுத்து நிழலான இடத்தில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

Pixabay

பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும்போதும் ஸ்மார்ட்போன் சூடாகும். எனவே பேட்டரி சேவர் மோட்-ஐ பயன்பாடு இல்லாத நேரங்களில் ஆன் செய்வது நல்லது.

Pixabay

தரமற்ற லோக்கல் பேட்டரிகள் பயன்படுத்துவதால் ஸ்மார்ட்போன்கள் சூடாகலாம். அதனால் தரமான பேட்டரிகளை பயன்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட்போனில் மால்வேர் போன்ற வைரஸ்கள் இருந்தால் சூடாக வாய்ப்புண்டு. அதனால் தேவையற்ற ஆப்களை நிறுவாமல் இருப்பது நல்லது.

சூடான சுவையான காளான் குருமா செய்வது எப்படி?

Follow Us on :-