சமந்தாவுக்கு வந்துள்ள மயோசிடிஸ் என்றால் என்ன?

சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை ஆட்டோஇம்யூன் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Instagram

மயோசிடிஸ் என்பது ஒரு அரிய வகை ஆட்டோஇம்யூன் நோயாகும்.

இது தசைகளை பலவீனப்படுத்துவதோடு, மிகுந்த வலி மற்றும் சோர்வை உண்டாக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனை இருந்தால், அது ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வலி மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

இது பொதுவாக கை, தோள்பட்டை, கால்கள், இடுப்பு, அடிவயிறு மற்றும் முதுகுத்தண்டில் உள்ள தசைகளை பாதிக்கிறது.

இந்த நிலை குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கிறது. இருப்பினும், இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.

மயோசிடிஸ் பிரச்சனைக்கு பிரத்யேகமாக எந்த சிகிச்சையும் இல்லை.

ஆனால் அவற்றின் தாக்கத்தை குறைக்க அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் சிகிச்சைகளை வழங்குவார்கள்.

ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம் எது?

Follow Us on :-