தற்போது பலர் இரவு நேரத்தில் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆனால் இரவில் இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதால் என்ன ஆகும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
Instagram
இரவு நேரத்தில் பிரியாணி போன்ற மசாலா அதிகமான உணவை சாப்பிடுவது அஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தும்
பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிடுவது மறுநாள் காலையில் பசியின்மைக்கு வழிவகுக்கும்.
இதை தொடர் பழக்கமாக வைத்திருந்தால் இரைப்பை குடல் நோய், இரைப்பை அழற்சி, இரைப்பை புண் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக பிரியாணி சாப்பிட்டால் தாகம் அதிகரிக்கும். அதனால் இரவில் சாப்பிட்டால் தாகம், வறட்சி பிரச்சினை உண்டாகும்.
Instagram
மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை உண்ணும் போது, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
Instagram
அதோடு இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
இரவு வயிறு நிறைய சாப்பிடுவது ஆழமான தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும்.