ஊறுகாய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
இந்திய உணவு முறையில் தவறாமல் இடம்பெறும் துணை உணவு ஊறுகாய். பல பொருட்களை கொண்டும் விதவிதமாக தயாரிக்கப்படும் ஊறுகாய்கள் நன்மைகள், தீமைகள் இரண்டையுமே கொண்டுள்ளன. அதுகுறித்து பார்ப்போம்.
Various source
காய்கறிகள், பழங்களை நொதித்தல் முறையில் ஊறுகாய் செய்வதால் அதில் லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் அதிகமாகிறது.
இந்த அமிலங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணியிர்களை வளப்படுத்துகின்றன.
ஊறுகாயை சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும் என்பதால் உணவில் சேர்க்கப்படுகிறது.
சில ஊறுகாய் வகைகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.
Various source
ஊறுகாயில் உள்ள அதிகளவிலான உப்பு மற்றும் எண்ணெய் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.
பலர் ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு பிரச்சினையை எதிர்கொள்ளலாம்.
ஊறுகாயில் எண்ணெய் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அளவாய் சாப்பிட்டால் அனைத்தும் அமிர்தமே என்பதற்கேற்ப ஊறுகாயையும் குறைவாக எடுத்துக் கொள்வது சிறந்தது.