கிராமத்து ஸ்டைல் அரைச்ச மீன் குழம்பு ஈஸியா செய்யலாம்!

கிராம மண் வாசம் மாறாத உணவுகளில் ஒன்று மீன் குழம்பு. ஆற்றில் பிடித்த மீனுக்கு வகையாக மசாலா அரைத்து குழம்பு வைத்தால் செம ருசியாக இருக்கும். கிராமத்து ஸ்டைல் அரைத்த மீன் குழம்பு செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மீன், புளி, தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், மிளகாய்தூள், தனியா தூள், உப்பு, வெந்தயம், கறிவேப்பிலை

மீனை நன்றாக சுத்தம் செய்து வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

பின்னர் அதனுடன் தேங்காய் துறுவல், மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்

Various Source

குக்கரில் எண்ணெய் விட்டு வெந்தயம், கறிவேப்பிலை, சீரகத்தை வதக்கி அரைத்த மசாலா, புளிக்கரைசலை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

நல்ல கொதி வதந்தும் மீன் துண்டுகளை போட்டு மூடி வேகவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான அரைத்த மீன் குழம்பு தயார்.

ஆண்மை குறைபாட்டை போக்கும் அழிஞ்சி பழத்தின் அற்புத பயன்கள்!

Follow Us on :-