சூப்பரான வெஜ் பரோட்டா ரோல் செய்வது எப்படி?

காய்கறிகளை முதன்மையாக கொண்டு செய்யப்படும் வெஜ் பரோட்டா ரோல் நாள் முழுவதும் சுருசுருப்பாக வேலை செய்ய நல்ல காலை உணவு. எளிதாக வெஜ் பரோட்டா ரோல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையானவை: கோதுமை மாவு, மைதா, சோடா உப்பு, முள்ளங்கி, கேரட் துறுவல், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா

2 கப் கோதுமை மாவுடன் ஒரு கப் மைதா மாவு, அரை ஸ்பூன் சோடா உப்பு, வெண்ணெய் சேர்த்து நீர் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் எண்ணெய் சட்டியில் வெங்காயத்தை எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ள வேண்டும்.

வதக்கிய வெங்காயத்துடன் கேரட், முள்ளங்கி துறுவலை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து சுருள வதக்க வேண்டும்.

Various Source

பிசைந்து வைத்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து தயார் செய்த பூரணத்தை அதில் வைத்து ஓரங்களை மூட வேண்டும்.

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தயார் செய்த வெஜ் ரோலை இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்க வேண்டும்.

பூரணத்தை டாகோஸ் போல இரண்டாக மடித்தோ அல்லது ரோலாக சுருட்டியோ கூட தயார் செய்யலாம்.

சுவையான சத்தான திணை உப்புமா ஈஸியா செய்யலாம்!

Follow Us on :-