சுவையான உடுப்பி சாம்பார் ஈஸியா செய்யலாம்!

தமிழர்களின் அன்றாட உணவில் முக்கியமானது சாம்பார். பல்வேறு வகை சாம்பார் உள்ள நிலையில் பலராலும் விரும்பப்படுவது உடுப்பி சாம்பார். நாக்கில் நிற்கும் சுவையை தரும் உடுப்பி சாம்பார் எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையானவை: புளி, மஞ்சள் பூசணி, முருங்கைக்காய், தக்காளி, மல்லித்தழை, வெல்லம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க: தேங்காய், உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகு தனியா, காய்ந்த மிளகாய், முந்திரி

முதலில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக வறுத்து அரைத்து தயார் செய்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு தாளிக்க வேண்டும்.

அதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் பூசணி, முருங்கைக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் அதில் புளிக்கரைசல் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

மிதமான கொதிநிலை வந்ததும் வறுத்து அரைத்த கலவையை அதில் சேர்க்க வேண்டும்.

பின்னர் வாசம் வரும் வரை கொதிக்க வைத்து மல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான உடுப்பி சாம்பார் தயார்.

வீட்டை கிருமிகள் இல்லாமல் சுத்தம் செய்வது எப்படி?

Follow Us on :-