இந்த ஆண்டின் டாப் 10 பில்லியனர்கள்! சொத்து மதிப்பு இவ்வளவா?
2022ம் ஆண்டின் டாப் 10 பில்லியனர்கள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பு விவரங்கள்!
Various source
10. ஸ்டீவ் பால்மர் - பிரபல தொழிலதிபரான பால்மர் அமெரிக்காவில் லாஸ் எஞ்சல்ஸ் க்ளிப்பர்ஸ் என்ற கூடைப்பந்து அணியின் உரிமையாளராக உள்ளார். ஆண்டு சொத்து மதிப்பு 79.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
9. கார்லோஸ் ஸ்லிம் - ஹெலு மெக்சிகோவை சேர்ந்த கார்லோஸ் தொழிலதிபர் மட்டுமல்ல, அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் செய்து வருபவர். கார்லோஸ் ஆண்டு சொத்து மதிப்பு 81 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
8. முகேஷ் அம்பானி - ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 91 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
7. லாரி எல்லிசன் - அமெரிக்காவை சேர்ந்த லாரி எல்லிசன் லனாய் (பைனாப்பிள் தீவு) தீவின் 98% உரிமையை தன்னகத்தே வைத்துள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
6. வாரன் பஃபெட் - பெர்க்ஷாயர் ஹத்தவே நிறுவனத்தின் சேர்மேனாகவும், சிஇஓவாகவும் வாரன் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர்
5. பில் கேட்ஸ் - உலக பணக்காரர்கள் பட்டியல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து பலரையும் வியக்க வைத்தவர் பில் கேட்ஸ். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 104.9 பில்லியன்
4. ஜெப் பெசோஸ் - உலக பிரபலமான அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ் இந்த ஆண்டின் உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 111.5 பில்லியன் டாலர்
3. கௌதம் அதானி - இவரது அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. இவரது சொத்த மதிப்பு 133.2 பில்லியன்
2. எலான் மஸ்க் - எலான் மஸ்க், டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு மையம், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார். இவரது உலகளாவிய சொத்து மதிப்பு 174.8 பில்லியன் டாலர்
1. பெர்னார்ட் அர்னால்ட் - உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர் பிரான்சை சேர்ந்த பெர்னார் அர்னால்ட். LVMH எனப்படும் Louis Vuitton Moet Henessy நிறுவனத்தை நிறுவியவர். இவரது சொத்து மதிப்பு 184.3 பில்லியன் டாலர்.