தற்போதைய காலத்தில் விட்டமின் குறைபாட்டை சரிசெய்ய பலரும் விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் அதிகமாக விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். அதுகுறித்து பார்ப்போம்.
Various Source
உணவுகள் மூலமாக இயற்கையாக சில விட்டமின்களை பெற முடியாத நிலையில் விட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆனால் செறிவூட்டப்பட்ட விட்டமின் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது மாத்திரைகளை பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தலாம்.
விட்டமின் ஈ மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அது இரத்தம் உறைதல், ரத்தக்கசிவு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
அதிகமான விட்டமின் டி மாத்திரைகள் உடலில் நச்சுத்தன்மை மற்று எடை இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
விட்டமின் சி மாத்திரைகளில் மற்ற மாத்திரைகளை விட பக்க விளைவுகள் குறைவு. எனினும் அதிகம் எடுத்தால் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படலாம்.
விட்டமின் ஏ மாத்திரைகள் அதிகமானால் ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்து நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.