உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா பயிற்சி அவசியமானதாக உள்ளது. யோகா பயிற்சியை சரியான விதத்தில் செய்தால் மட்டுமே பலனளிக்கும். யோகா பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
Pixabay
உடலையும் மனதையும் ஒன்றிணைத்து செய்யப்படும் அற்புதமான கலைதான் யோகா.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் பலவகை யோக ஆசனங்கள் உள்ளன.
அவரவர் வயது மற்றும் தேவைக்கு ஏற்ப சரியான யோக ஆசனங்களை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
யோக ஆசனங்களை விடியற் காலையில் ஆகாரம் ஏதும் கொள்ளாமல் வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும்.
Pixabay
யோகா செய்யும் இடம் திறந்தவெளியில் காற்றோட்டம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.
Pixabay
மன அமைதியை ஏற்படுத்தும் விதமான அமைதியான இடமாக இருக்க வேண்டியது அவசியம்.
யோக ஆசனங்களை வெறும் தரையில் அமர்ந்து செய்யக் கூடாது. தரை விரிப்புகள் அமைத்து அதன் மீது பயிற்சி செய்ய வேண்டும்.