வெயில் காலத்தில் மக்கள் விரும்பி குடிக்கும் பானங்களில் தயிரினால் செய்யப்படும் லஸ்ஸியும் ஒன்று. இனிப்பு, புளிப்பு என இரு சுவைகளிலும் பலவகை லஸ்ஸி ரெசிபிகள் உள்ளன. சுவையான பஞ்சாபி ஸ்டைல் லஸ்ஸி செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள் : தயிர் – 2 கப், சர்க்கரை – கால் கப், ஐஸ் கட்டி – 2, முந்திரி, பிஸ்தா, எலுமிச்சை பழம்.
தயிர் தண்ணீராக இல்லாமல் நன்றாக கெட்டியாக இருக்க வேண்டும். பெரும்பாலும் வீட்டில் கடையும் தயிர் ருசியாக இருக்கும்.
உறைந்த தயிரின் மேல் படியும் ஆடையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தயிரை எடுத்து மத்தியில் இட்டோ அல்லது மிக்ஸியில் போட்டோ நுரை பொங்க அடிக்க வேண்டும்.
Various Source
அதனுடன் கால் கப் சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து கலக்கிவிட வேண்டும்.
பின்னர் அதன் மேல் எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு, எடுத்து வைத்திருந்த தயிர் ஆடையை அதன் மேல் சேர்க்க வேண்டும்.