குழந்தைகள் விரும்பும் சுவையான மீன் ஆம்லேட் செய்யலாம் வாங்க!
மீன், முட்டை உள்ளிட்டவற்றில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த மீன் மற்றும் முட்டையை கொண்டு குழந்தைகள் விரும்பும் வகையில் சுவையான மீன் ஆம்லேட் செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: முள் அதிகம் இல்லாத மீன் வகை, முட்டை, வெங்காயம், தக்காளி, மிளகாய், சீரகம், மிளகு தூள், உப்பு
மீனை கழுவி சுத்தம் செய்து வேகவைத்து முள் நீக்கி சதையை உதிரியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலையை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வதக்கிய கலவையுடன் உதிர்த்து வைத்த மீனை கொட்டி கலந்துக் கொள்ள வேண்டும்.
Various Source
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மீன் கலவையை ஒரு கை சேர்த்து கிளறி விட வேண்டும்.
அதை தோசைக் கல்லில் ஊற்றி உப்பு, மிளகுத்தூள் தூவி, எண்ணெய் விட்டு எடுத்தால் சுவையான மீன் ஆம்லேட் தயார்.