சுவையான கேரட் கேசரி செய்யலாம் வாங்க!

வீடுகளில் அவ்வபோது செய்யப்படும் இனிப்பு வகைகளில் கேசரியும் ஒன்று. ரவை கேசரி, சேமியா கேசரி போல சுவையான கேரட் கேசரியும் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். கேரட் கேசரி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: ரவை, கேரட், சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய்

வாணலியில் நெய் விட்டு முந்திரியை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் ரவையை கொட்டி மெதுவாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேரட்டை சீவி அரைத்து விழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ரவை மற்றும் கேரட் விழுது சேர்த்து கட்டி விழாமல் வேகும் வரை கிளற வேண்டும்.

அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் நல்ல பதம் வரும்போது முந்திரி தூவி இறக்கினால் சுவையான கேரட் கேசரி தயார்.

கொங்கு ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் செய்வது எப்படி?

Follow Us on :-