சூப்பரான சுவையான இன்ஸ்டண்ட் பருப்பு பொடி செய்வது எப்படி?
வீடுகளில் செய்யப்படும் சாதப் பொடிகளில் சுவையானது பருப்பு பொடி. இந்த பருப்பு பொடியை தயார் செய்து டப்பாவில் வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சாதத்துடன் கலந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சுவையான பருப்புப் பொடி செய்வது எப்படி என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு, பாசி பருப்பு, பொட்டுக்கடலை, வரமிளகாய், பூண்டு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பருப்பு வகைகளை தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த பருப்பு வகைகளை ஒரு தட்டில் பரப்பி ஆற விட வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் சீரகம், பெருங்காய, கறிவேப்பிலை, வரமிளகாயை வறுத்து எடுத்து ஆற வைக்க வேண்டும்.
Various source
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தோல் நீக்கிய பூண்டு பற்களை போன்ற நன்றாக பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது தயார் செய்த அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
இப்போது பருப்பு பொடி தயார். பருப்பு பொடியை காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தினால் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.