நெஞ்சு சளியை விரட்டும் காரச்சாரமான மிளகு குழம்பு ரெசிபி!

சளி, இறுமல் உள்ளிட்ட உடல் நல பிரச்சினைகளை விரட்டி அடிப்பதில் மிளகு முக்கியமான மருந்தாகும். மிளகை கொண்டு சூப்பரான ஆரோக்கியமான மிளகு குழம்பு எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: குறுமிளகு – 4 தேக்கரண்டி, வரமிளகாய் – 3, கடுகு – 1 தேக்கரண்டி, குழம்பு மசாலா – 2 தேக்கரண்டி

சிறுதுண்டு இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, சிறிதளவு புளி, நல்லெண்ணெய் – 100 மி.லி, உப்பு தேவையான அளவு

குறுமிளகு, இஞ்சி, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நேவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய், 4 கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்

Various source

பின்னர் அதில் அரைத்து வைத்த மிளகு மசாலா, குழம்பு மசாலா, உரித்த பூண்டு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் எண்ணெய் பிரியும் தருவாயில் சூடாக இறக்கி சாதத்தில் கலந்து பரிமாறினால் சிறப்பான சுவையில் இருக்கும்.

இந்த மிளகு குழம்பு சளி, இருமல் பிரச்சினையை சரிசெய்வதுடன் நெஞ்சுசளியை போக்கும்.

வாழைக்காயை யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்?

Follow Us on :-