இட்லி தமிழரின் வழக்கமான காலை உணவுகளில் ஒன்று. இட்லியை விட குஷ்பூ இட்லி மிருதுவாகவும் உப்பலாகவும் இருக்கும். புசுபுசுவென மிருதுவான குஷ்பூ இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: இட்லி அரிசி – 4 கப், குண்டு உளுந்து – 1 கப், ஜவ்வரிசி – அரை கப், விளக்கெண்ணெய், பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
அரிசி, உளுந்து, ஜவ்வரிசி மூன்றையும் தனித்தனியாக பாத்திரங்களில் வைத்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த அரிசியையும், ஜவ்வரிசையையும் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த அரிசி மாவுடன் உளுந்து மாவையும், உப்பும் சேர்த்து கெட்டியாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
கடைசியாக கொஞ்சம் விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கி 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
மாவு ஊற்றும் முன்னர் பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன் கலந்து வழக்கமாக இட்லி ஊற்றுவது போல ஊற்றி அவித்து எடுத்தால் பொசுபொசுவென குஷ்பூ இட்லி தயார்.