தற்போதைய காலத்தில் அனைவரும் பெரும்பாலும் ஹெட்ஃபோன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது காதுகளை மட்டுமல்லாமல் மன நலத்தையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Pixabay
ஹெட்போனில் கேட்பது வெளியே கேட்கும் அளவிற்கு சத்தமாக பலர் ஹெட்போன்களில் பாடல் கேட்கின்றனர்.
அவ்வாறாக அதிகமான சத்தத்தில் ஹெட்போன் பயன்படுத்துவது காது செவிப்பறைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தொடர்ந்து அதிக சத்தத்தில் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதுகள் கேட்கும் திறனை இழக்கும் அபாயம் உள்ளது.
குறைந்த சத்தத்தில் நீண்ட நேரம் ஹெட்போனை பயன்படுத்துவது கேட்கும் திறனை பாதிக்கும் வாய்ப்புள்ளது.
Pixabay
அதிக சத்தத்தில் ஹெட்போன் பயன்படுத்துவதால் மூளைக்கு அழுத்தம் அதிகரித்து மனநல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.
தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு சாதாரண நேரங்களில் காதுகளில் அதீத சத்தங்கள் கேட்பதாக கூறப்படுகிறது.
அதீத ஒலியில் பாடல்கள் கேட்பதால் காது செவிப்பறைகளில் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.
காது வலி, கீச் சத்தங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை ஆலோசிப்பது நல்லது.