தாகத்திற்காக குளிர்பானம் குடித்தால் என்ன ஆகும்..?

கோடைக்காலங்களில் தாகத்தை தணிக்க மக்கள் பலர் புட்டிகளில் அடைத்த குளிர்பானங்களை பருகுகின்றனர். கார்பனேற்றம் செய்யப்பட்ட இந்த குளிர்பானங்கள் குளிர்ச்சியை அளித்தாலும் அதிகம் அருந்தினால் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியவை.

Various Source

தொடர்ந்து கார்பனேற்ற குளிர்பானங்களை அருந்துவதால் பற்களில் அரிப்பு, பல் கூச்சம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அதிகமாக குளிர்பானங்களை குடிக்கும்போது அதில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கார்பனேற்ற பானங்கள் அருந்தும்போது ஏற்படும் தொடர் ஏப்பம் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகளை அளிக்கும்.

கார்பனேற்ற பானங்கள் அதிக கலோரிகளை கொண்டவை. இதை அதிகம் அருந்துவதால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Various Source

மற்ற இயற்கை பானங்களை போல இவற்றில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் நோயெதிர்ப்பு சக்தி குறையும்.

கார்பனேற்ற பானங்களை அதிகம் அருந்துவதால் குடலில், வயிற்றில் ஒவ்வாமை பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உள்ளது.

குளிர்பானங்களில் உள்ள கார்பன் பொருட்களால் எலும்புகளின் கால்சியம் பாதிக்கப்பட்டு எலும்பு பிரச்சினைகள் ஏற்படலாம்.

இட்லி சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..?

Follow Us on :-