உடல் அழகை நீட்டிக்க அருமையான சித்த மருத்துவ குறிப்புகள்..!

நமது உடலை அழகாகவும், பொலிவாகவும் வைத்திருக்க சித்தர்கள் அப்போதே பல இயற்கையான குறிப்புகளை வழங்கியுள்ளனர். உடலை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை காணலாம்..

Various Source

சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்க ஆப்பிளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தடவிக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு பழத்தை வெட்டி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகம் சுருக்கங்கள் இன்றி இளமையாகும்.

தேங்காய் எண்ணெய்யில் மஞ்சளை குழைத்து தடவி குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் ஆகும்.

வேப்பிலை, புதினா, மருதாணியை காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து முகத்தில் 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முகம் கருத்து போகாது.

Various Source

கை, கால் முட்டிகளில் உள்ள கறுப்பு நீங்க அந்த இடத்தில் எலுமிச்சை பழ சாற்றை தேய்த்து குளிக்க வேண்டும்.

Various Source

வறண்ட சருமம் புதுப்பொலிவு அடைய தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

புதினா சாறு, எலுமிச்சை சாறுடன் பயித்தம் பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி வர பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

திகட்டாத தேங்காய் பூவின் அற்புதமான பயன்கள்!

Follow Us on :-