முடிவுக்கு வந்த Legacy – விடைபெற்றார் ரோஜர் பெடரர்
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் சாதனைகள்
Google
உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் வீரர்களில் நம்பர் 1 வீரராக அறியப்படுபவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர்.
இதுவரை 20 க்ராண்ட்ஸ்லாம், 8 விம்பிள்டன் உள்பட பல கோப்பைகளை வென்று சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர்.
மேலும் 310 வாரங்கள் தொடர்ந்து உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடமும் பெற்றவர் ரோஜர் பெடரர்.
க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிரபலமான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச ஆகிய 4 இடங்களில் வென்ற 7 ஆண் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர்.
ரோஜர் பெடரர் 2022 லெவர் கோப்பைக்கு பிறகு தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்திருந்தார்.
நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை பெடரர் எதிர்கொண்டார்.
Google
ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக் சாக் இணையுடன் மோதினார்.
Google
இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ - ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது.
Google
இதனால் தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் ரசிகர்களிடமிந்து விடை பெற்றார் டென்னிஸ் உலக ஜாம்பவான் ரோஜர் பெடரர்.
lifestyle
கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றதா வெண்டைக்காய்....?
Follow Us on :-
கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றதா வெண்டைக்காய்....?