பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் எதை சாப்பிடலாம்?

உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதி ஆப்பிள் முக்கியமானது. தற்போது சந்தைகளில் சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் கிடைக்கும் நிலையில் எதை யார் சாப்பிடலாம் என அறிவோம்.

Various Source

பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களிலும் புரதம், விட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை ஆப்பிள் சிறந்தது.

ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் அதிகரிக்க சிவப்பு ஆப்பிள்கள் சிறப்பானவை.

பச்சை ஆப்பிளில் உள்ள ஃப்ளாவனாய்டுகள் நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை குறைக்கிறது.

Various Source

பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களுமே செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கிறது.

Various Source

பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட கால்சியம் சத்து கூடுதலாக இருப்பதால் எலும்பிற்கு வலு அளிக்கிறது.

உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு புளிப்பு சுவை கொண்ட பச்சை ஆப்பிள் சிறந்தது.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Various Source

குடற்புழுக்களை நீக்கும் அற்புதமான உணவுகள்!

Follow Us on :-