அழகா இருக்க ஆசையா? இதை செய்யுங்க! ரகுல் ப்ரீத் சிங் சொன்ன ரகசியம்!
உடலை அழகாக பராமரிப்பது குறித்து ரகுல் ப்ரீத் சிங் சொன்ன டிப்ஸ்!
Instagram
தமிழில் தீரன், என்.ஜி.கே, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தற்போது இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது 32 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங் உடலை ஸ்லிம்மாக அழகாக தொடர்ந்து மெயிண்டெயின் செய்து வருவது குறித்து பேசியுள்ளார்.
அதில் “நீ குண்டா இல்லையே.. ஏன் உடற்பயிற்சி செய்கிறாய்? என பலர் கேட்கிறார்கள். உடற்பயிற்சி உடல் கொழுப்பை குறைப்பதற்கு மட்டுமல்ல..”
“.. உடற்பயிற்சி என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்கிறேன்.”
Instagram
“நீங்களும் உங்களுக்காக உடற்பயிற்சி செய்யுங்கள். அப்போது அழகும், ஆரோக்கியமும் சொந்தமாகும். அதற்காக நாள் முழுவதும் ஜிம்மிலேயே இருக்க அவசியம் இல்லை.”
Instagram
”இயற்கையை ரசித்தபடி தோட்டங்களில் கூட உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சியால் மனம் அடையும் ஆனந்தத்தை உடற்பயிற்சி செய்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.