மொறுமொறுப்பான ராகி மசாலா தோசை செய்வது எப்படி?

உணவு வகைகளில் ராகி உள்ளிட்ட தானியங்களை கொண்டு செய்யும் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று. ராகியை வைத்து சுவையான மசாலா தோசை செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையானவை: அரிசி மாவு, ராகி மாவு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, கடுகு, உப்பு தேவையான அளவு

ராகி மாவையும், அரிசி மாவையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து எடுத்துக் கொள்ளவும்.

அதை ராகி, அரிசி மாவுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும்.

Various Source

உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி மசித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்க வேண்டும்.

Various Source

பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறி தயார் செய்து கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி ராகி மாவு கலவையை தோசையாக ஊற்றி அதில் உருளைக்கிழங்கு மசாலாவை மேலே தடவ வேண்டும்.

பின்னர் மடித்து எடுத்தால் சூடான மொறுமொறுப்பான ராகி மசாலா தோசை தயார்.

சுக்குடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிடலாம்?

Follow Us on :-