கேட்டாலும் கிடைக்காத கேழ்வரகின் மகத்துவமான பயன்கள்!
ஆதி முதல் அந்தம் வரை சகல உடல் நலன்களையும் அள்ளி வழங்கும் கேழ்வரகின் பயன்களை தெரிந்து கொள்வோம்.
Various Source
கேழ்வரகில் உடலுக்கு நன்மை அளிக்கும் அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புசத்து, நியாசின் உள்ளிட்டவை உள்ளது.
கேழ்வரகை கூல், அடை, லட்டு, பிஸ்கட் என பலவிதமான ருசியான உணவுகளாக சமைக்கலாம்.
இதில் உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியை அளிக்கிறது.
கேழ்வரகு கூழை மோருடன் கலந்து அருந்தும்போது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், வலுவையும் அளிக்கிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அரிசி உணவுக்கு பதிலாக கேழ்வரகு கூழை குடித்தால் விரைவில் எடை குறையும்.
இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
ரத்தசோகை, ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு கேழ்வரகு உணவு அற்புதமான அறுமருந்தாகும்.
கேழ்வரகு இதயநோய்கள் வராமல் காப்பதோடு, பதற்றம், மனசோர்வு, மன உளைச்சல் ஆகியவற்றையும் குறைக்க உதவும்.
பால் ஊட்டும் தாய்மார்கள் தொடர்ந்து கேழ்வரகு கூல் குடித்து வந்தால் பால் சுரப்பது அதிகரிக்கும்.
lifestyle
தினமும் ஒரு துண்டு சீஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Follow Us on :-
தினமும் ஒரு துண்டு சீஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?