சுடசுட சுவையான பூரிக்கிழங்கு சூப்பரா செய்யலாம்!

வீட்டில் சப்பாத்தி, பூரி வகைகள் செய்தாலே பூரிக்கிழங்குதான் முதன்மையான சைட் டிஷ். பூரிக்கிழங்கை சுவையான முறையில் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு, கடுகு, சீரகம், கடலை பருப்பு, வர மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், வெங்காயம், கறிவேப்பிலை

உருளைக்கிழங்கை பாத்திரத்தில் போட்டு அவித்து தோல் உரித்து மசித்துக் கொள்ள வேண்டும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வர மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மஞ்சள் தூளை சேர்த்து கிளறவும்

பின்னர் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வேக விட வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சூடான சுவையான பூரி மசாலா தயார்.

மன அழுத்தம் குறைக்கும் அற்புத உணவுகள்!

Follow Us on :-