பொங்கல் ஸ்பெஷல்! சூப்பரான பச்சரிசி ரவா பொங்கல் செய்யலாம் வாங்க!

பொங்கல் என்றாலே அது பச்சரிசியில்தான் செய்யப்படும். பச்சரிசியுடன் ரவா சேர்த்து செய்யப்படும் பொங்கல் வித்தியாசமான சுவையை அளிப்பதுடன் குழந்தைகளும் விரும்புவர். பச்சரிசி ரவா பொங்கல் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பச்சரிசி – அரை கிலோ, ரவா – கால் கிலோ, பாசிப்பருப்பு – கால் கிலோ, இஞ்சி, மிளகு, முந்திரி, நெய், கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவி வேக வைக்க வேண்டும்.

வெள்ளை ரவையை கடாயில் கொட்டி நெய் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம் போட்டு வதக்கி அதனுடன் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.

Various Source

பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்க்க வேண்டும்.

அதில் குழைய வேகவைத்த பாசிப்பருப்பை முதலில் சேர்க்க வேண்டும்.

பின்னர் வறுத்து வைத்திருக்கும் ரவையை கலந்து கொதிக்கவிட்டு கிளற வேண்டும்.

இறுதியாக கொஞ்சம் நெய் சேர்த்து வேகவைத்த பச்சரிசையையும் சேர்த்து பொங்கல் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து குலைவாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

Various Source

இறுதியாக இறக்கும் முன்னர் ஒரு கரண்டி நெய்யை பொங்கல் மேல் ஊற்றி விட்டு இறக்கினால் கமகமக்கும் பச்சரிசி ரவா பொங்கல் தயார்.

மார்க்கெட்டுக்கு வந்த மோட்டோ G34 5ஜி!!

Follow Us on :-