உடலுக்கு பல சத்துக்களை வழங்கும் உணவுப்பொருள் நார்த்தங்காய். ஊறுகாய்க்கு பிரபலமான நார்த்தங்காயை வைத்து சுவையான நார்த்தங்காய் சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையானவை: அரிசி, நார்த்தங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கடலை பருப்பு, உளுந்து, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு
காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயத்தை தனித்தனியே வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
நார்த்தங்காயை சாறு பிழிந்து எடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியை உதிரியாக வரும் அளவு வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Various Source
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து ஆகியவற்றை தாளித்து கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
அதில் பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பிறகு நார்த்தங்காய் சாறு கலவையை அதில் ஊற்றி சாதத்தை விட்டு கிளறி விட வேண்டும்.
கிளறிய பின் அடுப்பை நிறுத்தி விட்டு, சாதத்தில் வறுத்து பொடித்த மிளகாய், வெந்தய பொடியை தூவி கிளறினால் கமகமவென நார்த்தங்காய் சாதம் தயார்.