வேப்பம் பூவின் அற்புதமான மருத்துவ பலன்கள்..!

வேப்பமரத்தின் இலை, வேர், காய், பழம், பூ மற்றும் வேர் என அனைத்து பாகங்களிலும் மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது. அதனால்தான் வீட்டுக்கு ஒரு வேப்பமரம் முன்னோர்கள் வளர்த்தனர்.

Various Source

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டது என்றாலும் வேப்பம் பூ அதில் சிறப்பு மிக்கது.

வேப்ப மரத்தின் பூக்களை மென்று சாப்பிட்டால் ஏப்பம் வருவது, பசியின்மை மற்றும் வாயுத்தொல்லை சரியாகும்.

வேப்பம் பூவில் துவையல் அல்லது ரசம் வைத்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும்.

வேப்பம் பூவில் உள்ள கசப்புத்தன்மை குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலை சுத்தப்படுத்தும்.

Various Source

வேப்பம் பூவை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வர பித்தம் தெளியும்.

சூடான நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினைகள் சரியாகும்.

வேப்பம் பூவை தேனீராக செய்து குடித்து வந்தால் வயிறு பிரச்சினைகள், மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.

சுக்குடன் எந்த பொருளை சேர்த்தால் என்ன பயன்..?

Follow Us on :-