அகத்தை சீர் செய்யும் மருத்துவ மூலிகை என்பதால் சீரகம் என்று சொல்லப்படுகிறது. தமிழர்களின் நீண்ட கால மூலிகை, உணவு கலாச்சாரத்தில் சீரகத்திற்கு முக்கிய பங்குண்டு. சீரகத்தின் மருத்துவ பயன்களை காண்போம்.
Various Source
சீரகத்தை திராட்சை ஜூஸுடன் கலந்து பருகி வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
சீரகத்தை இஞ்சி, உப்புடன் மோரில் கலந்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை சரியாகும்.
பித்தம் குணமாக இஞ்சி, எலுமிச்சை சாறுடன் சீரகத்தை கலந்து ஊற வைத்து குடிக்கலாம்.
சீரகத்துடன் வெத்தலை, மிளகு சேர்த்து மென்று தின்றால் வயிற்றுப் பொருமல் குணமாகும்.
Various Source
ஓமத்துடன் சீரகம் சிறிது சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு சரியாகும்.
சீரகத்தை மென்று தின்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தலைசுற்றல், மயக்கம் பிரச்சினை நீங்கும்.
கீழாநெல்லியுடன் சீரகம், எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு நீங்கும்.