மலபார் ஸ்பெஷல் கலத்தப்பம் வீட்டிலேயே செய்வது எப்படி?
கலத்தப்பம் என்ற பதார்த்தம் கேரளாவின் மலபார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஒரு பதார்த்தமாகும். சுவையான கலத்தப்பத்தை நமது வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.
Various source
தேவையான பொருட்கள்: பச்சரிசி, பொன்னி அரிசி, வெல்லம், தண்ணீர், நெய், ஏலக்காய், வெங்காயம், தேங்காய்
ஊற வைத்த 1 கப் பச்சரிசியையும், அரை கப் வேக வைத்த பொன்னி அரிசியையும் சேர்த்து ஒன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் சோடா கால் டீஸ்பூன் சேர்க்க வேண்டும்.
வெல்லத்தை தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீராக கரைய விட வேண்டும்.
வெல்லம் நன்றாக கரைந்து வந்ததும் அதை மாவுட ஊற்றி கெட்டியாக கலக்க வேண்டும்.
குக்கரில் நெய் ஊற்றி தேங்காய், வெங்காயத்தை வறுத்து அதனுடன் மாவை ஊற்றி மூடி விடவும்
12 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வேகவைத்து எடுத்து துண்டுகளாக வெட்டி வைத்தால் சுவையான கலத்தப்பம் தயார்.