மதுரை பேமஸ் பருத்திப்பால் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

மதுரை என்றாலே ஜிகர்தண்டாவுக்கு பிறகு ரொம்பவும் பிரபலமானது பருத்திப்பால். பருத்திக் கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பருத்திப்பால் வித்தியாசமான சுவை கொண்டது. வீட்டிலேயே பருத்திப்பால் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: பருத்தி கொட்டை, வெல்லம், பச்சரிசி, ஏலக்காய், சுக்கு, தேங்காய்

பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பச்சரிசியை நேவாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை பாகு காய்ச்சி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பருத்தி பாலை ஊற்றி மிதமான சூட்டில் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

Various Source

பால் கொதிக்கத் தொடங்கியதும் அரைத்த பச்சரிசி மாவையும், வெல்லப்பாகையும் அடுத்தடுத்து சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பால் கெட்டியாக வரும்போது ஏலக்காய், சுக்கை நன்றாக பொடித்து பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடைசியாக தேங்காய் துறுவல் சேர்த்து கிளறி சூடாக பறிமாறினால் சூப்பரான பருத்திப்பால் தயார்.

ஊட்டச்சத்து நிறைந்த சிவப்பு சோள அடை செய்வது எப்படி?

Follow Us on :-