சுவையான குழாய் புட்டு ஈஸியா செய்யலாம்!

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளில் புட்டு முக்கியமானது. எளிதில் ஜீரணமாகக் கூடிய புட்டு குழந்தைகளுக்கு உகந்த உணவு. எளிதாக வீட்டிலேயே குழாய் புட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு ஒரு கப், நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சிறிதளவு, நெய், முந்திரி, உப்பு தேவையான அளவு

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பச்சரிசி மாவை போட்டு நன்கு வறுக்க வேண்டும்.

வறுத்த பச்சரிசி மாவில் உப்பு நீர் கரைசலை தெளித்து பிசிறி விட்டு 10 நிமிடம் வைக்கவும்

நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.

புட்டு குழாயில் புட்டு மாவை அடைத்து அதன்மேல் கொஞ்சம் தேங்காய் துறுவல் கிளறலை அடைக்க வேண்டும்.

பின்னர் குழாயை ஆவியில் வேகவைத்து எடுத்தால் குழாய் புட்டு தயார்.

புட்டை எடுத்து நெய்யில் வறுத்த முந்திரி கலந்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.

துளசி இலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!

Follow Us on :-