கேரளா ஸ்டைல் கோவக்காய் தோரன் ஈஸியா செய்யலாம்

கேரளாவில் செய்யப்படும் கோவக்காய் தோரன் சுவையானதும் சத்துமிக்கதும் ஆகும். சுவையான கோவக்காய் தோரன் செய்யும் முறைகளைப் பார்ப்போம்

Various Source

கோவக்காய், ஒரு சின்ன வெங்காயம், வர மிளகாய், நான்கு பச்சை மிளகாய், பூண்டு மற்றும் துருவிய தேங்காய், கறிவேப்பிலை தேவைப்படும்

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அதனுடன் சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கோவக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்க்கவும்

நன்றாகக் கிளறி, வாணலியை மூடி வைத்து குறைந்த நெருப்பில் வேகவிடவும்

கோவக்காய் சரியாக சமைக்கப்பட்டதும் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி எடுத்தால் கோவைக்காய் தோரன் தயார்.

Various Source

நீரிழிவு நோயாளிகள் சப்பாத்தி சாப்பிடலாமா?

Follow Us on :-