கேரளா ஸ்பெஷல் தேங்காய் சம்மந்தி ஈஸியா செய்யலாம் வாங்க!
கேரளாவின் பிரபலமான உணவுகளில் தேங்காய் சம்மந்தி முக்கியமானது. பார்க்க தேங்காய் துவையல் போல இருந்தாலும் சுவையில் மிகவும் வித்தியாசமானது. சுவையான தேங்காய் சம்மந்தி செய்வது எப்படி என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: தேங்காய், வரமிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, புளி, கறிவேப்பிலை, இஞ்சி,
தேங்காயை நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் சின்னவெங்காயம், வரமிளகாய், உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
அதனுடன் நெல்லிக்காய் அளவில் பாதியளவு புளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.