சுவையான ஜிலேபி வீட்டிலேயே செய்ய ஈஸி செய்முறை!

இனிப்பு பண்டங்கள் என்றாலே பலருக்கும் விருப்பம். இனிப்பு மிகுதியான ஜிலேபி பலருக்கும் பிடித்தமான பண்டமாக உள்ளது. சிவப்பான சுவையான ஜிலேபி எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மைதா மாவு, கார்ன் மாவு, தயிர், நெய், சர்க்கரை, கேசரி பவுடர், பேக்கிங் பவுடர்

முதலில் 1 கப் மைதா மாவுடன், 3 ஸ்பூன் கார்ன் மாவு, தயிர், நெய், கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.

எந்த நிறத்தில் ஜிலேபி வரவேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் கேசரி பவுடர் சேர்த்து கலந்தபின் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதம் வரும்வரை காய்ச்சி பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்.

Various Source

தயார் செய்த ஜிலேபி மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, ஜிலேபி மாவை துளையிட்ட துணியில் வைத்து பிழிந்து சுட்டு எடுக்க வேண்டும்.

சுட்டு எடுத்த ஜிலேபியை சர்க்கரை பாகில் முக்கி எடுத்து ஆற விட்டால் சுவையான ஜிலேபி தயார்.

ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத காய்கறிகள், உணவுப்பொருட்கள்!

Follow Us on :-