பலரும் இறைச்சியை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அவ்வாறு ஃப்ரிட்ஜில் வைப்பது ஆரோக்கியமானதா? இறைச்சியை எப்படி பராமரிக்க வேண்டும் என பார்ப்போம்.
Pixabay
இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வெளிப்படையாக ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் நாற்றம் மற்ற பொருட்களை பாதிக்கக் கூடும்.
இறைச்சி, மீன் போன்றவற்றை ஒரு கவரில் போட்டு சுற்றி ஃப்ரிட்ஜில் தனி அடுக்கில் வைக்க வேண்டும்.
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும்போது அதிக குளிர்நிலையில் கட்டியாகும் அளவில் வைக்கக் கூடாது.
ஃப்ரிட்ஜில் வைத்த இறைச்சியை வெளியில் எடுத்து அதன் குளிர்நிலை குறைந்த பின்பே சமைக்க தொடங்க வேண்டும்.
Pixabay
இறைச்சியை ஒரு நாளைக்கும் மேல் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
Pixabay
இறைச்சியை வெட்டி எடுத்த 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிடுவது நல்லது.
சூடு செய்த இறைச்சி உணவை மீண்டும் ப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடு செய்வதை தவிர்ப்பது நல்லது.