World Milk Day பாலின் அவசியம் குறித்து தெரிஞ்சிக்கோங்க!
தினசரி உணவில் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கக்கூடியது பால். பாலின் அவசியத்தை உணர்த்துவதற்காக ஜூன் 1ம் தேதி உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலின் அவசியம் குறித்து தெரிந்து கொள்வோம்.
Pixabay
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபை பாலை ‘உலக உணவு’ என அறிவித்தது.
பசும்பாலில் இன்றியமையாத பல அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன.
குழந்தைகளின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்திற்கு பால் அவசியமான ஒன்று.
Pixabay
100 கிராம் பாலில் 120 மி.கி கால்சியம், 4.4 மி.கி கார்போஹைட்ரேட், 3.2 மி.கி புரதம் மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளது.
Pixabay
பாலில் உள்ள கால்சியம் சத்தும் எலும்புகளின் வலிமைக்கு அவசியமாக உள்ளது.
தினசரி 400 மி.லி முதல் 500 மி.லி வரை பால் குடிப்பது உடலுக்கு நன்மை அளிக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது