நாம் சந்தித்து வரும் உடல் பிரச்சினைகளில் ஆபத்தானதும், எளிதில் கண்டுபிடிக்க முடியாததுமாக மூளை கட்டி இருக்கிறது. சில அறிகுறிகள் மூலம் மூளை கட்டி உருவாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various Source
மூளை கட்டியானது உடலில் உள்ள நியூரான்களை கட்டுபாடில்லாமல் செய்து வலிப்பு ஏற்படுத்த கூடும்.
பின் கழுத்து பகுதியில் சிறுமூளையில் கட்டி ஏற்படும் பட்சத்தில் தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மங்கலான பார்வை, இரட்டை பார்வை கோளாறுகள் மூளை கட்டியின் அறிகுறியாக இருக்கலாம்.
மூளை கட்டிகள் ஏற்படும் பட்சத்தில் நடத்தையில் மாற்றம் மற்றும் ஞாபக மறதி அதிகரித்தல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
Various Source
கட்டிகள் காரணமாக மூளையில் ஏற்படும் எடிமா தொடர்ந்து குமட்டல், வாந்தி பிரச்சினைகளை ஏற்படுத்தும்.