உடலை உறுதியாக்கும் தானிய அடை செய்வது எப்படி?

தானிய வகைகள் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளை அளிக்கிறது. தானிய வகைகளை சேர்த்து செய்யப்படும் தானிய அடை உடலுக்கு தேவையான ஆற்றலையும், அத்தியாவசிய சத்துக்களையும் வழங்குகிறது.

Various source

தேவையான தானியங்கள்: சோளம், திணை, வரகு, பச்சரிசி, துவரம் பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு, கடலைப்பருப்பு, தட்டைப்பயறு,

தேவையான பொருட்கள்: மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேங்காய், வெங்காயம், காய்கறிகள், உப்பு தேவையான அளவு

அனைத்து பயறு வகைகளையும் சுத்தம் செய்து காயவைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், வெங்காயம், காய்கறிகள், உப்பு சேர்த்து கிளறவும்.

Various source

பின்னர் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைத்து தோசை மாவு பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும்.

Various source

பின்னர் தோசை கல்லில் எண்ணெய் விட்டு அடையாக சுட்டு எடுக்க வேண்டும்.

தேங்காய் சட்னி சேர்த்து தானிய அடை சாப்பிடுவது நல்ல சுவையை தரும்.

அடிவயிறு தொப்பை இந்த ட்ரிங்க்ஸை ட்ரை பண்ணுங்க!

Follow Us on :-