சுவையான சூப்பரான பெப்பர் இட்லி செய்வது எப்படி?

இட்லி தமிழர்களின் அன்றாட காலை உணவாக உள்ளது. தினம்தோறும் வெறும் இட்லியை செய்வதை விட விதவிதமான வகைகளில் இட்லி செய்தால் குழந்தைகளும் சாப்பிட விரும்புவர். சூப்பரான சுவையான பெப்பர் இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: இட்லி, மிளகுத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு

முதலில் இட்லியை சுட்டு எடுத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு இட்லி துண்டுகளை போட்டு லேசாக பிரட்டி எடுத்து தனியே வைக்கவும்.

Various source

பிறகு கடாயில் கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும்

பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் இட்லித் துண்டுகளை போட்டு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்

கடைசியில் மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான பெப்பர் இட்லி தயார்.

ஆரோக்கியமான பூண்டு கறிவேப்பிலை குழம்பு!

Follow Us on :-