ஆப்பிள், திராட்சை போட்டு சூப்பரான பழப் பொங்கல் செய்யலாமா?

பொங்கல் தமிழர்களின் உணவு பழக்கங்களில் ஒன்று. பழங்களை போட்டு சுவையாக செய்யும் பழப் பொங்கல் சுவையானதும், உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும். அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: பச்சரிசி, பாசி பருப்பு, வெல்லம், ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஏலக்காய், முந்திரி, உலர்ந்த திராட்சை, நெய்,

ஆப்பிளை பொடியாகவும் நறுக்கிக் கொள்ள வேண்டும், மாதுளை, திராட்சையை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சியை கடாயில் நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி மற்று பாசிப் பருப்பை சுத்தம் செய்து குழைவாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

Various source

பின்னர் அதில் நெய் சேர்த்து ஏலக்காய், வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளற வேண்டும்.

Various source

பின்னர் அதனுடன் தயார் செய்து வைத்த பழ வகைகளை சேர்த்து சிறிது நேரம் கிளறிய பின் இறக்க வேண்டும்.

இப்போது சூடான சுவையான பழப் பொங்கல் தயார்.

காலையில் அவல் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Follow Us on :-