குளிருக்கு இதமாக வெஜிடபிள் சூப் செய்வது எப்படி??

கலவையான காய்கறிகளைக் கொண்டு அருமையான வெஜிடபிள் சூப் எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

தேவையான பொருட்கள்: எண்ணெய் - 2 ஸ்பூன், வெங்காயம் - 1/2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன், கோஸ், கேரட், பீன்ஸ், மக்காசோளம், குடை மிளகாய், பட்டாணி,

பிரிஞ்சு இலை - 1, தண்ணீர் - 2 கப், இடித்த காய்ந்த மிளகாய் - சிறிதளவு, மிளகு தூள்- சிறிதளவு, உப்பு, சோள மாவு - 3 ஸ்பூன், ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் கோஸ், கேரட், பீன்ஸ், பிரிஞ்சு இலை சேர்த்து வதக்குங்கள். தற்போது தண்ணீர் ஒரு கப் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் மக்காசோளம், பட்டாணி, குடைமிளகாய் சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் மிளகுத் தூள், காய்ந்த மிளகாய் தூள் சேர்த்து கிளறுங்கள்.

Social Media

அடுத்ததாக உப்பு மற்றும் சோள மாவை அரை கப் தண்ணீரில் கலந்து அதையும் ஊற்றி கிளறுங்கள்.

Social Media

சிறு தீயில் 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள். இறுதியாக ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து கிளறி இறக்கினால் வெஜிடபிள் சூப் தயார்.

Social Media

வாரத்தில் ஒரு முறை பாகற்காயை சாப்பிட்டு பாருங்க!!

Follow Us on :-