வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான பஞ்சு போல் சாஃப்டான பனான கேக் (வாழைப்பழ கேக்) செய்வது எப்படி என பார்ப்போம்...
Social Media
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1½ கப், சர்க்கரை - ½ கப், முட்டை - 2, வெனிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன், பால் - 4 டேபிள் ஸ்பூன், பழுத்த வாழைப்பழம் - 3, உப்பு - சிறிதளவு, வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: மைதா, உப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து சலித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், முட்டையையும் எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்து கலக்கவும்.
இத்துடன் வெனிலா எசன்ஸை கலக்கவும். பின் மசித்த வாழைப்பழத்தை சேர்க்கவும்.
அடுத்ததாக, மைதாவையும், பாலையும் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர், இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் 170c கிரேடில் 30-40 நிமிடம் வேக விடவும்.
Social Media
கேக் வெந்ததும் அதை ஆற வைத்து, சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
Social Media
சிறிது நேரம் கழித்து ஃபிரிட்ஜில் இருந்து எடுத்தால் வாழைப்பழ கேக் ரெடி.