காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி??

நல்ல காரசாரமான நண்டு ரசம் வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

Social Media

தேவையான பொருட்கள்: நண்டு – 1/4 கிலோ, சின்ன வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 3, பூண்டு – 4 பற்கள், இஞ்சி – சிறிது, நல்லெண்ணெய் & உப்பு – தேவையான அளவு, மல்லித்தழை - கையளவு

தாளிக்க: கடுகு - 1/4 ஸ்பூன், சீரகம் - 1/4 ஸ்பூன், மிளகு - 1/4 ஸ்பூன், சோம்பு – 1/2ஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் நண்டினை சுத்தம் செய்து அலசி எடுத்து வைக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, சூடான பின் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவை ஆறியதும் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு மண்சட்டி வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நண்டு சேர்த்து அரைத்த வைத்துள்ள விழுது, உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாய் வைத்து கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, நண்டு சேர்த்து கொதிக்க விட்டு பறிமாறினால் அருமையான நண்டு ரசம் ரெடி.

உருளைக்கிழங்கின் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

Follow Us on :-